நிலையான விவசாயத்திற்கான பொன்னுஸ் இயற்கைப் பொருட்களின் ஸ்தாபகரின் பயணம்
ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர் விவசாயத்தின் மீது அவருக்கு இருந்த அதீத பற்றினால் விவசாயத்தை மேம்படுத்த பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். ஒரு விவசாயி படும் வேதனைகைளை அனுபவித்து உணர்ந்தவர் எங்கள் நிறுவனர். ஆதலால் விவசாயிகளின் கவலைகளை போக்க எண்ணெய் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பயிர்களுக்கு ஆரோக்கியமான உரங்கள் மற்றும் கடற்பாசி சாறு தயாரிப்புகளைப் பற்றி அவர் சிந்திக்கத் தொடங்கி வெற்றிகரமாகச் செயல்படுத்தினார். தன்னுடைய நிலங்களில் அதை பரிசோதனை செய்து அதீத விளைச்சலை ஈட்டினார். தனது கண்டுபிடிப்பைத் தன்னுடைய லாபத்திற்கு மட்டும் பயன்படுத்தாமல் அனைத்து விவசாய பெருமக்களுக்கும் சென்றடையவேணுடும் என்று “PONNUS RYTHU SEVA KENDRAM” என்னும் நிறுவனத்தை தொடங்கினார்.